கு - என்றால் இருள், ரு - என்றால் நீக்குபவர்
ஆக நம் அக இருளை நீக்கி புற இருளை போக்க சரியானதொரு குருவை
அனைவரும் தேர்ந்தெடுக்க வேண்டும்.இறைவனும் குருவாக பல ரூபங்களில்
வந்திருக்கிறார். அதில் ஒருவர் ஆதிகுரு தட்சிணாமூர்த்தி இன்னொரு
குரு நவ நாயர்களுள் ஒருவர். குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள்
ஜாதகத்தில் குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்க்கே
வலிமை அதிகம். அதனால் தான் திருமண காலத்திற்க்கு ஜோதிடர்கள்,
குரு பார்வை இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். ஆனால் இன்று
கோவில்களில் நவ கிரக குருவிற்கு செய்ய வேண்டியதை தட்சிணாமூர்த்திக்கு
செய்துவிடுகிறார்கள்.இது நம் அறியாமையை காட்டுகிறது. நாம்
நம்மை உணர்ந்தால் தான் நமக்கு இது தெரியும். ஆனால் இதை உரக்க
சொல்ல யாரும் இல்லை. இதை சமீபகாலத்தில் திரு.சுகிசிவம் அய்யா
கூட சக்திவிகடன் புத்தகத்தில் குறிப்பிட்டார்கள்.ஆக நம் மூன்றாவது
கண்ணாண சுட்சம நெற்றிக்கண்ணை திறக்க வழி கண்டால் தான் நமக்கு
இது தெரியும். ஆக இந்த பிறவியின் கர்மத்தை தீர்த்து உயர்ந்த
வாழ்க்கைக்கு நாம் அனைவரும் குரு அருளின் துணை கொண்டு செல்வோம்.