ஜாதகம் என்ற சொல்லுக்கு உண்டானவன் என்று பொருள்.
ஒரு குழந்தை தாயின் கருப்பையில் இருந்து வெளிவந்து தொப்புள்
கொடி அறுத்து இந்த உலகத்தின் முதல் மூச்சை சுவாசிக்கும் பொழுது
வானில் என்ன கிரக அமைப்பு இருந்ததோ அதைதான் நாம் "ராசி
சக்கரம்" "ஜாதக கட்டம்" என்று குறித்து வைக்கிறோம்.
வருங்கால நிலையை நமக்கு காட்டும் தெய்வீக கண்ணாடியே ஜாதகம்.