Untitled Document
 
  Quick Links
ஆன்மீகம்
ஜோதிடம்
ஜாதகம்
நட்சத்திரங்கள்
பஞ்ச பூதங்கள்
சித்தர்கள்
சித்தர்களின் ஆட்சி
நவக்கிரக கோவில்கள்
குரு
முத்திரைகள்
கண்திருஷ்டி
 
    ஜோதிடம்

ஜோதிடம் என்ற சொல் ஜ்ஜோதிஷம் என்ற வடமொழி சொல்லிலிருந்து வந்தது. ஜ்ஜோதிஷம் - என்றால் ஒளியையுடைய கிரகங்களைப் பற்றி அறியும் சாஸ்திரம் என்று பொருள்.

ஆக ஒளியை உடைய நவ கிரகங்களைப் பற்றியும், நட்சத்திரங்களைப் பற்றியும் அறியும் கலையே ஜோதிடம் ஆகும்.

ஜோதி - என்றால் ஒளி. ஒளிதரும் சூரியனை முதலாவதாகக் கொண்டு ஜோதிட சாஸ்திரம் செயல்படுகிறது.

கிரக நிலைகளை ஆராய்ந்து அதன் ஆளுகைளைக் கணக்கிட்டு சூழ்நிலைகளை சரிப்படுத்திக்கொள்ளும் உத்தியே ஜோதிடம் என்றும் சொல்லலாம். ஜோதிடத்தை ஒரு கணக்குமுறை என்று சொல்லுகிறபோது எப்படி நாம் பள்ளியில் பயிலும் கணிதத்தை கணக்கிட்டு விடையறிய சூத்திரத்தைப் பயன்படுத்துகிறோமோ அதே போல் இதை நமது முன்னோர்கள் கோவில்களில் கற்சிலைகள் வடிவில் நம் சித்திரங்கள் வடிவிலும் குறித்து வைத்திருக்கிறார்கள்.

சித்தர்கள் காடுகளிலும் மலைகளிலும் தனிமையில் அமர்ந்து செய்த தியானத்தின் பயனாக நமக்கு கிடைத்த இந்த பொக்கிஷமே ஜோதிடம். அவர்கள் ஓலைசுவடிகளில் இதை கணிக்கும் முறையை துல்லியமாக சொல்லி உள்ளார்கள்.

இதை நாம் முறைபடி படித்து சரியான முறையில் ஜோதிடம் கணித்து நமது கர்மவினைகளை போக்கிகொள்ளலாம்.கர்ம வினைகள் என்பது நாம் நமது முன்னோர்கள், தெரிந்து, தெரியாமலும் செய்த பாவங்களே ஆகும். இதனால் ஏற்படும் துன்பங்களை போக்கி கொள்ள நமக்கு நல்ல குருவின் துணை தேவை.

ஒவ்வொருவர் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் பரிகாரங்கள் அவரவர் ஜாதகத்திலே உள்ளது. நம்முடைய துன்பங்களுக்கு சரியான பரிகாரங்கள் சொல்லப்படுவதும் இல்லை, சரியான முறையில் அவை செய்யப்படுவதும் இல்லை. ஜோதிடத்தை சரியான வழிகாட்டுதலுடனும் ஆன்மீக ரீதியாக அனுகினால் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் உண்டு.

நம்நாட்டில் மட்டும் இல்லாமல் வெளி நாடுகளில் பல பல்கலை கழகங்களில் இந்த ஜோதிடத்திற்கு தனி படிப்பே உள்ளது. அதற்கு Vedic Astrology என்று பெயர் இதை பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் இன்றும் உலகம் முழுவதும் நடந்து கொண்டு இருக்கின்றது.

கிரகங்களின் நிலை எந்தெந்த அமைப்பில் உள்ளதோ அதற்கு உரிய ஆளுகைகள் தான் நம் வாழ்வில் பிரதிபலிக்கின்றன என்பதை சொன்னேன். இப்பொழுது அதற்கு உதாரணமாக ஒரு சில கிரகங்களைப் பற்றிப் பார்ப்போம்.

 
Untitled Document


 

  Cell : +91 94860 63744
                  97861 95125
  saimaharishi10@gmail.com
  saimaharishi10@yahoo.com

 
 

Flag Counter