Untitled Document
 
  Quick Links
ஆன்மீகம்
ஜோதிடம்
ஜாதகம்
நட்சத்திரங்கள்
பஞ்ச பூதங்கள்
சித்தர்கள்
சித்தர்களின் ஆட்சி
நவக்கிரக கோவில்கள்
குரு
முத்திரைகள்
கண்திருஷ்டி
 
    மாவீரன் நேதாஜி

ஜெய்ஹிந்த்

வாழ்க்கை

சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் வருடம் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில்லுள்ள கட்டாக் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஜானகிநாத் போஸ். போஸ் ராகின்சேவ் காலேஜ் ஸ்கூல் - கட்டாக், ஸ்காடிஷ் சர்ச் ஸ்கூல், கல்கத்தா மற்றும் பிட்ஷ்வில்லியம் காலேஜ் ஆகிய இடங்களில் படித்தார். 1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாக வந்தார்.

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திர போரட்டத்தில் பங்கேற்றார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.

இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு சன்னியாசியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்து வரும் முகர்ஜி கமிஷன் நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது. ஆனால் இந்திய அரசு அவ்வறிக்கையை ஏற்கவில்லை.

இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றிய வங்காளதேசத்தின் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரால் இந்தியா உன்னால் தான் விடுதலை பெரும் என்று ஆசிர்வதிக்கப்பட்ட மாபெரும் ஒரே தலைவர் நேதாஜி.

சலோ டெல்லி

"அதோ அந்த நதியின் கரைக்கு அப்பால், அந்த அடர்ந்த காடுகளுக்கும் பின்னால், நம் கண்களில்படும் அந்த மலைகளுக்கும் பின்னால் நமக்காக உறுதியளிக்கப்பட்ட அந்த பூமி உள்ளது - எந்த மண்ணில் இருந்து நாம் உயிர்பெற்றோமோ - அந்த பூமியை நோக்கி நாம் திரும்புகிறோம். புறப்படுங்கள், இந்தியா அழைக்கிறது... ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது. கிளர்ந்தெழுங்கள், உங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நம்மை அடிமையாக்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக் கொண்டு நமது பூமிக்கு பாதை அமைப்போம் அல்லது இறைவனின் சித்தம் வேறானால் வீரர்களுக்குரிய தியாக மரணத்தை தழுவுங்கள். நமது கடைசி மூச்சில் டெல்லிக்கு செல்லும் நமது பாதைக்கு முத்தமிட்டுவிட்டுச் சாவோம். டெல்லிக்கு செல்லும் பாதை, விடுதலை நோக்கிய பாதை.... சலோ டெல்லி :"

பிப்ரவரி 4, 1944 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க புறப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு இடையே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய எழுச்சியுரை இது!

பாரத திருநாட்டை 200 ஆண்டுக் காலம் அடிமைத் தனையால் பிணைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற இந்தியத்தலைவர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 107 வது பிறந்த நாள் இன்று.

இந்திய விடுதலை போராட்டத்தின் இறுதி கட்டத்தில், இரண்டாவது உலகப் போர் ஏற்பட்டிருந்த அன்றைய உலக சூழலை கருத்தில் கொண்டு, சர்வதேச சக்திகளின் துணையுடன் அன்னிய மண்ணில் களம் அமைத்து அவர் நடத்திய விடுதலை போர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை கதிகலங்க அடித்தது.

அமைதியான, சாத்வீக போராட்டங்களால் மட்டுமின்றி, ஆயுதம் தாங்கிய வீர வழியில் இந்தியாவிற்கு உள்ளேயும், இந்தியாவிற்கு வெளியேயும் இருந்து நடத்தப்பட்ட போராட்டங்களால் (போர்களால்) பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட நிர்பந்தங்களால்தான் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது என்பதே வரலாறு நமக்கு காட்டிவரும் மிகமுக்கிய உண்மையாகும்.

இந்தியாவிற்கு இப்படியும் போராடத் தெரியும் என்பதை உலகத்திற்கு உணர்த்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்!

தனது 23-வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சாத்வீக வழியில் போராடும் பாதையில் அடுத்த 20 ஆண்டுகளை செலவிட்டார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இரண்டு முறை (41 வயதிலேயே) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் சாத்வீகம் வெள்ளையருக்கு புரியாத மொழி என்பதை புரிந்து கொண்ட சுபாஷ் சந்திர போஸ், 1941 -ஆம் ஆண்டு தன்னை வீட்டுச் சிறை வைத்திருந்த வெள்ளை அரசுக்கு ஏமாற்றத்தை கொடுத்துவிட்டு கல்கத்தாவில் இருந்து தப்பித்து ஆப்கானிஸ்தான், ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்றார். இரண்டாம் உலகப்போர் நடந்து கொணடிருந்த அந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, ஜெர்மன்-இத்தாலி உதவியுடன் (ஹிட்லருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் ஆனால் தோல்வியில் முடிந்துவிட்டது) ஆயுத போரை துவக்க திட்டம் வகுத்தார்.

மாவீரன் நேதாஜியின் இறுதி உரை

இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது ஆகஸ்டு 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்தியா, "நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!"

இந்தியாவில் தமிழ்நாட்டில் நேதாஜி நேசித்த ஒப்பற்ற ஒரே தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் ஐயா மட்டுமே.

 
Untitled Document


 

  Cell : +91 94860 63744
                  97861 95125
  saimaharishi10@gmail.com
  saimaharishi10@yahoo.com

 
 

Flag Counter