ஏழு முனிவர்களான (சப்தரிஷிகள்) அகத்தியர், காஷியபர்,
கௌசிகர், பரத்வாஸர், கௌதமர், அத்ரி, பிருகு, இச்சுவடிகளை
எழுதியவர்களாக கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் பெரும்பாலும்
அகத்திய முனிவரின் பெயரிலேயே ஒலைகள் கிடைக்கின்றன, வாசிப்புகளும்
அவர் பெயரிலேயே வாசிக்கப்படுகின்றன, மற்றும் வைசியர்,
நந்தி, போகர், வசிஸ்டர், மற்றும் வால்மீகி ஆகிய நாடிகளும்
முக்கியமானவை. இந்த நாடி ஜோதிடர்கள் தமிழ்நாட்டின் செவ்வாய்
பரிகாரத்தலமான சிறப்புமிக்க வைத்தீசுவரன் கோயிலைசுற்றி
வாழ்ந்து வருகின்றார்கள்.
மகரிஷிகளின் நாடிஜோதிடத்தில் மிகமுக்கியமானது காகபுஜண்ட நாடிஜோதிடம் ஆகும்.
நாடி ஜோதிட நூல்கள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமானது
சப்தரிஷி காண்டம் என்ற நூலாகும். நாடி ஜோதிடத்தைக்குறித்து
பல நல்ல ஆன்மீக நண்பர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
இந்த நாடி ஏடுகள் ஆரம்ப காலகட்டத்தில்(சுவடிகள்) தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. ஆங்கிலேய ஆட்சியின்பொழுது நாடி ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவ குறிப்புகள், எதிர்காலம் குறித்த குறிப்புகள், மூலிகைகள் தயாரிக்கும் முறைகள் பற்றிய குறிப்புகளில் அதீத அக்கறை காட்டியதால் இங்கிருந்து சுவடிகள் சிலவற்றை எடுத்து சென்றுவிட்டனர். ஆனால் பல இலைகள் இங்கேயே பல நல்லவர்களின் வீடுகளில் இருப்பு வைத்துக் கொண்டனர். சில ஏடுகள் அழிந்து விட்டன, மீதமுள்ளவைகள் ஏலம் விடப்பட்டன. மீதியுள்ள ஏடுகள் போகிபண்டிகையில் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி அழித்து விட்டனர். இவற்றிர்க்கு முக்கிய காரணம் ஒருசாரார் மட்டுமே எல்லா வற்றையும் செய்ய வேண்டும் என்ற நோக்கமே. இவையெல்லாம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே நடைபெற்றன. இந்த ஒலைச் சுவடிகளையே ஜோதிட குடும்பத்தினர் வைத்தீசுவரன் கோயிலில் பத்திரப்படுத்திவைத்துள்ளனர். பரம்பரையாக ஒருவர் பின் ஒருவராக இக்கலையை அவர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.
முதலாவது காண்டம் - வாழ்க்கையின் பொதுப்பலன்களை பொதுவாகக்கூறுவது.
இரண்டாவது காண்டம் - குடும்பம், வாக்கு, கல்வி, தனம், நேத்திரம் முதலியவை பற்றி கூறுவது.
மூன்றாவது காண்டம் - சகோதரர்கள் தொடர்பான விசயங்களை கூறுவது
நான்காவது காண்டம் - தாய், மனை, நிலங்கள், வாகனம், வீடு முதலியவற்றையும் வாழ்க்கையில் அடையும் சுகங்கள் பற்றியும் கூறுவது.
ஐந்தாவது காண்டம் - பிள்ளைகள் பற்றி கூறுவது
ஆறாவது காண்டம் - வாழ்க்கையில் ஏற்படும் விரோதி, வியாதி, கடன் வழக்குகள், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் பற்றி கூறுவது.
ஏழாவது காண்டம் - திருமணம் பற்றியும் வாழ்க்கைத்துணைவர் பற்றிய விபரங்களையும் கூறுவது.
எட்டாவது காண்டம் - உயிர்வாழும் காலம், விபத்துக்கள் பற்றி கூறுவது
ஒன்பதாவது காண்டம் - தந்தை, செல்வம், யோகம், குரு பற்றி கூறுவது
பத்தாவது காண்டம் - தொழில்பற்றி கூறுவது
பதினோராவது காண்டம் - வேலை, வருமானங்கள் தொடர்பாக கூறுவது
பன்னிரண்டாவது காண்டம் - செலவு, அடுத்த பிறப்பு, மோட்சம் போன்றவை பற்றி கூறுவது.
சாந்தி காண்டம் - ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், கர்மவினை போன்றவற்றுக்கான பரிகாரங்கள் பற்றி கூறுவது.
தீட்சை காண்டம் - மந்திரம் யந்திரம் போன்றவை பற்றியது
ஔஷத காண்டம் - மருத்துவம் பற்றி கூறுவது
திசாபுத்தி காண்டம் - வாழ்க்கையில் நடக்கும் திசைகள்பற்றியும் அவற்றின் விளைவுகளையும் விபரங்களையும் கூறுவது
முதல் காண்டம் முதல் பன்னிரெண்டாவது காண்டம் வரையிலான காண்டங்கள் தரும் விவரங்கள் ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 வது இராசி வரையிலான வீடுகளுக்குண்டன பலாபலன்களை ஒத்திருக்கும்.