Untitled Document
 
  Quick Links
ஆன்மீகம்
ஜோதிடம்
ஜாதகம்
நட்சத்திரங்கள்
பஞ்ச பூதங்கள்
சித்தர்கள்
சித்தர்களின் ஆட்சி
நவக்கிரக கோவில்கள்
குரு
முத்திரைகள்
கண்திருஷ்டி
 
    நவக்கிரகங்கள்

பார்க்க முடிந்த கிரகங்கள் 7 முடியாத கிரகங்கள் 2. இவற்றின் இரகசியங்களை சித்தர்கள் நமக்கு சூட்சமமாக முற்காலத்திலேயே உணர்த்தி சென்றுள்ளனர். நவகிரகங்களுக்கும் நமது வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

இதை அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும் உள்ளது என்ற பழமொழியின் மூலம் அறியலாம்.

பிண்டம் என்றால் நமது உடம்பு. சித்தர்கள் நமது உடம்பை "நவதுவாரம் உள்ள கூடு" என்று குறிப்பிட்டார்கள.

"நவ என்றால் ஒன்பது" திதி என்ற ஒன்றே தேதியாக மாறியது. தேதி கிழமையானது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஆகிய ஒவ்வொறு நாளையும் ஒவ்வொரு கிரகங்களே ஆட்சி செய்கின்றன.

சூரியன் :-

சூரியன் இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை செய்யவே முடியாது . உலக சக்திகளின் பிறப்பிடம் சூரியன் தான் . சூரிய ஒளி பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் 20 வினாடிகள் ஆகின்றன . இந்த ஒளியிலிருந்து தான் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கின்றன . ஒளிச்சேர்க்கை மட்டும் நின்று விட்டால் நம் பூமியில் உயிரினங்கள் வாழவே முடியாது . எல்லா உயிரினங்களுக்கும் தேவையான ஆற்றலின் மூல வடிவம் ஒளிச்சேர்க்கை தான் . உயிரினங்களுக்கு தேவையான உணவும் , ஆற்றலும் தாவரங்களையே சார்ந்தே உள்ளன.

ஏன் நாம் சுவாசிக்க தேவைப்படும் ஆக்சிஜன் தாவரங்களில் இருந்தே கிடைக்கிறது . சூரிய ஆற்றல் , பூமியின் அனைத்து உயிர்களின் ஆதார ஆற்றல் ஆகும்.. மேலும் பூமியின் காலநிலை மற்றும் வானிலை ஆகியவையும் சூரியனை சார்ந்தே உள்ளன. சூரியன் நவ நாயகர்களில் முதல்வர் ஆத்மகாரகன், தந்தைகாரகன் இவர் பலகிரகங்களுக்கும் ஒளி கொடுப்பவர்.

சூரிய ஒளியில்லை என்றால் உலகம் இல்லை. சூரிய ஒளி கண்டவுடன் தான் தாமரை மலர்கிறது. சூரிய காந்தி பூ சூரியன் செல்லும் பக்கமெல்லாம் திரும்புகிறது. தற்காலத்தில் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கின்றார்கள். இந்த சூரியன் ஜாதகத்தில் நம் உடல் உறுப்புகளான தலை, கண், முதலிய அவயங்களை குறிக்கின்றார். ஜாதகத்தில் சூரியன் சரியான நிலையில் இல்லாமல் இருந்தால் தலை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், கண் பார்வை குறைபாடு போன்றவை ஏற்படக்கூடும்.

சந்திரன் :-

ஞாயிற்றுகிழமை விடுமுறை முடிந்து, திங்கட்கிழமை பள்ளிக்கோ, அலுவலகத்திற்கோ நாம் செல்லும் பொழுது நம்மில் பலர் குழப்பத்துடனே செல்கிறார்கள் காரணம் சந்திரன். இந்த சந்திரன் நம் மனதை ஆளும் கிரகம் மனக்குழப்பங்கள் திங்கட்கிழமையிலேயே நடக்கின்றன. இந்த சந்திரன் ஓர் நீர் கிரகம் அம்மாவாசை மற்றும் பெளர்ணமி போன்ற தினங்கள் சந்திரனை வைத்தே அறியப்படுகிறது. இந்த நாளில் கடலின் அலையின் வேகம் அதிகமாக இருக்கும். மனநோயாளிகளின் மன வேகமும் அதிகமாக இருக்கும்.

சனி :-

"சனி" இந்த வார்த்தையை கேட்டவுடனேயே நம்மில் பலர் நடுங்கிவிடுவார்கள். ஏழரை சனி, கண்டசனி, அஷ்டமசனி, அர்த்தாஷ்டமசனி இவைகளைப் பற்றி பயங்கள் பல இருந்தாலும் நம்மை சுற்றி உள்ளவர்களைப் பற்றிப்புரிந்து கொள்ளும் திறனும் எந்த கஷ்டத்தையும் எதிர்கொள்ளும் மன தைரியத்தையும் நமக்கு கொடுப்பவர் சனி.

சளி பிடித்தால் சனி பிடித்தது போல் என்பார்கள் காரணம் ஏன் தெரியுமா? சளியை குறிக்கும் கிரகம் சனி. சனி ஒரு குளிர்ச்சியான கிரகம். சனியின் தானியமான எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணை நம் உடம்பின் சூட்டை சமநிலையில் வைத்து கொள்ள உதவுகிறது. ஆகவே சனி நீராடு என்று நம்முன்னோர்கள் குறிப்பிட்டார்கள்.

சனி நம் ஜாதகத்தில் ஆயுளுக்கு காரகன். இயற்க்கையாக நம் ஆயுள் முடியும் தருவாயில் தொண்டையில் கோழை (சளி) வந்து கட்டிக்கொள்ளும். சனி ஒரு கறுப்பு நிற கிரகம். சனியின் வாகனமாகிய காக்கையோ கறுப்பு நிறம். இந்த சனி கிரகத்தில் தான் நம் கர்மவினைகள் பதிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான கோர விபத்துகள் இயற்கை சீற்றங்கள் இந்த சனியின் தாக்க எண்ணிலேயே நடக்கிறது. உதாரணமாக 26-12-2004 அன்று வந்த சுனாமி என்ற ஆழிப்பேரழிவின் கொடுமையை நாம் மறந்திருக்க மாட்டோம். ஆகவே ஒவ்வொருவரும் எல்லா விஷயங்களையும் ஆராய்ச்சி செய்யுங்கள். உண்மையை உணருங்கள். இஸ்லாமிய பெருமக்கள் இந்த சனிகிழமையை, சைத்தானின் நாள் என்று குறிப்பிடுவார்கள். இதில் எந்த சுப காரியமும் செய்யமாட்டார்கள். நாமும் அஷ்டமி என்று சொல்லப்படும் 8வது திதியில் எந்த ஒரு சுப காரியங்களை செய்யமாட்டோம். இந்த நாளில் சனியின் தாக்கம் பூமியில் அதிகமாக இருக்கும்.

குரு :-

குரு பார்வை கோடி நன்மை. குரு இருக்கும் இடத்தை விட ஜாதகத்தில் அவர் பார்க்கும் இடத்திற்கே நன்மை அதிகம். குரு பகவானுக்கு, பொன்னன், ஆசான், அமைச்சர், தேவகுரு, என்றும் பல பெயர்கள் உள்ளன. ஒருவர் ஜாதகத்தில் குருவின் பலம் பெற்று இருப்பது முக்கியமே. குரு பலம் இருந்தால் மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், திருமணத்தடை போன்றவைகள். நீங்கும் குருபகவானின் ஒரு வருட பெயர்சியால் உலகில் பல மாற்றங்கள் நிகழும் என்பதை பழம் பெறும் பாடல் ஒன்றின் மூலம் அறியலாம்.

ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறைவைத்ததும்,
தீதிலா தொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்
இன்மை எட்டினிலே வாலிபட்டம் இழந்து - போகும்படியானதும்,
ஈசனானொறு பத்திலே தலை ஓட்டிலே இரந்துண்டதும்,
தர்ம புத்திரர் நாலிலே வனவாசம்படி போனதும்
சத்திய மாமுனி ஆறிலே இரு காலிலே தலை பூண்டதும்,
வன்மையுற்றிய ராவணன் முடி பண்ணிரண்டினில் வீழ்ந்ததும்.

ஆக 'குரு' ஜென்மம் என்கிற 1லும், 3,4,6,8,10,12, ஆகிய இடங்களில் கெடு பலன்களை கொடுக்கிறார். இந்தப் பழைய பாடலில் பல புராண இணைப்புகள் உள்ளன. இராமாயணம், மகாபாரதம் ஆகிய இருபெறும் இதிகாசங்கள் இந்த குருவோடு சம்பந்தபடுகின்றன. குருவை புத்திரகாரகன் என்று நம் சித்தர்கள் சொல்லி வைத்தார்கள் இன்றைய நமது விஞ்ஞானம் குருவை சுற்றி ஒரு மஞ்சள் நிறமான ஒளி உள்ளது என்று சொல்கிறது. இந்த குருவைச்சுற்றி மீத்தேன் வாயுவு சூழ்ந்துள்ளது.

ஒருவர் ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும் கஜகேசரி யோகம் என்ற ஒரு யோகம் எல்லா தோஷத்திற்க்கும் தீர்வாக அமையும். கஜம் என்றால் யானை இந்த யோகம் ஜாதகத்தில் இருந்தால் சூரியனை கண்ட பணிபோல் நம் கஷ்டங்கள் நீங்கும் இதிலிருந்து குருவின் சிறப்பை நாம் புரிந்து கொள்ளலாம்.

 
Untitled Document


 

  Cell : +91 94860 63744
                  97861 95125
  saimaharishi10@gmail.com
  saimaharishi10@yahoo.com


நவகிரக துதி

சூரியன்

உலகெலாம் இருளகற்றி ஒளிவிடும் சோதியே
ஓய்விலா வலம்வரும் செங்கதிரே
சூரியனே, நற்சுடரே - நீ எனக்கு
சுற்றம் சூழ சுகந் தருவாய்.

சந்திரன்

தருவாய் வருவாய் வான்புகழ் அனைத்தும்
தினமும் வளரும் வான்மதி நீயே
ஆளும்கிரக ஆரம்ப முதலே
அருளும் பொருளும் அருள்வாய் எனக்கு.

செவ்வாய்

என் ஏற்றமிகு சாதகத்தில் உன் ஆட்சி
ஓங்கார சொரூபனே செவ்வாயே
ஏங்கிடும் அடியாரின் குறைநீக்கி
ஏவல் எனைக் காத்திடுவாய் வையகத்தே

புதன்

வையகம் போற்றிடும் புத்திக்கு நாயகனே புதனே
வான்புகழ் கொள்வோரின் வெற்றிக்கு மூலவனே
நெஞ்சுக்கு நீதி தந்து நேர்மைக்கு இடமளித்து
நெடுங்காலம் வாழ அருள் புரிவாய் எனக்கு

குரு

அருங்கலையும் கல்வியும் அருளும் குருவே
அரசனும் ஆண்டியும் வேண்டிடும் துணையே
குறைகள் அகற்றி குலம் தழைக்க
கருணை புரிவாய் காத்தருள்வாய்.

சுக்கிரன்

வயலும் வளமும் வழங்கிடும் சுக்கிரனே
உழவும் தொழிலும் சிறந்து ஓங்க
வறுமை நீங்கி வளமுடன் வாழ
வேண்டுவன அருள விரைந்து வருக

சனீஸ்வரர்

வருக வருக வாரி வழங்கும் வள்ளலே
வினை தீரத் துதிப்பேன் உன் புகழே
சடுதியில் வந்தென்னைக் காத்திடுவாய்
சங்கடங்கள் அகற்றிடுவாய் சனீஸ்வரனே

ராகு

வரவேண்டும் தரவேண்டும் நின் அருளை - என்
வாடாத குடும்பத்தில் இராகுவே
எண்திசையும் புகழ் மணக்க
இசைந்தருள்வாய் இக்கணமே

கேது

கணப்பொழுதும் உனை மறவேன்
கோலம் பலபுரியும் கேது பகவானே
காலமெலாம் வளமுடன் வாழ
கண்திறப்பாய் கனிந்து..

 

 
 

Flag Counter