Untitled Document
 
  Quick Links
ஆன்மீகம்
ஜோதிடம்
ஜாதகம்
நட்சத்திரங்கள்
பஞ்ச பூதங்கள்
சித்தர்கள்
சித்தர்களின் ஆட்சி
நவக்கிரக கோவில்கள்
குரு
முத்திரைகள்
கண்திருஷ்டி
 
    ருத்ராட்ச தேர்

மலைப்பிரதேசங்களில் வளரும் ஒருவகையான மரத்தின் விதைதான் ருத்ராட்சம். இதற்கு தனித்துவமான சிறப்புகள் பல உண்டு. தன்னைச் சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளை இது கொண்டிருக்கிறது. எனவே, இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.

ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால், அதை சுற்றி உண்டாகும் ஒளி சக்தி வட்டம் நம் ஒளி உடலை தூய்மைப்படுத்துகிறது. இந்த ஒளிவட்டம் அவரவர் உடல்நிலை மற்றும் மனநிலையை பொறுத்து அமையும்.

நீங்கள் புதுஇடங்களுக்கு செல்லும் போது அங்கிருக்கும் அதிர்வுகள் உங்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால் உங்களால் அமைதியாக இருக்க முடியாது. ஆனால் ருத்ராட்சம் அணிந்தால் எவ்விதமான பாதிப்பும் நம்மை தீண்ட முடியாது.மனநிலை சாந்தமாகவே இருக்கும். சக்திவட்டம் நம்மைக் கவசம் போல் பாதுகாக்கும்.

அபூர்வ ஆற்றல் கொண்ட ருத்ராட்சம் பலவகைப்படும். இருமுகம் கொண்ட ருத்ராட்சத்திலிருந்து 21 முகங்கள் கொண்ட ருத்ராட்சம் வரை பயன்பாட்டில் உள்ளது.

ஒருமுகம் கொண்ட ஏகமுகி ருத்ராட்சம் மிகவும் சக்தி வாய்ந்தது. (சரியான வழிகாட்டுதல் இன்றி இதை அணிவது நல்லதல்ல). துவிமுகி என்னும் இருமுகம் கொண்ட ருத்ராட்சம் பொருள் வளத்தை தரும்.

ஐந்துமுகம் கொண்ட ருத்ராட்சம் உடல் ஆரோக்கியம் தரும். ஆறுமுகம் கொண்ட சண்முகி ருத்ராட்சத்தை 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அணிவதால் தாயின் பூரண அன்பிற்கு பாத்திரமாகலாம்.

ருத்ராட்ச மணிகளை அணிந்து கொள்வதால் உடல், உள்ளம், உயிர் இவற்றிற்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. மேலும் தேகசுகம் ஆரோக்கியம் அமைதி கிடைக்கிறது.

தீய சக்திகள் அனுகாமல் கவசமாய் காக்கின்றது. உடலில் வாதம், பித்தம், சிலேத்துமம் இம்மூன்றும் ஒரே சீராக இருக்க இவை பெரிதும் உதவுகின்றது.

ருத்ராட்சத்தை எப்படி வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் ருத்ராட்சத்தை தனியாக அணியாமல் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் அது இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்லது.

அதற்காகத்தான் ருத்ராட்சத்தின் இரு பக்கத்திலும் பூண் (தங்கம், வெள்ளி, செம்பு) போன்று செய்து அதனை கயிற்றில் கட்டி அணிந்து கொள்ளவேண்டும்.

ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்றும் குரோதம் கிடையாது. வட இந்தியப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.

இன்றைக்கும் தரமான, பழமைவாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது.

சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கும். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு. அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

ருத்ராட்சம் காசி, நேபாளம் போன்ற இடங்களில் அதிகமாக விளைகிறது.

மேலும் உள்ளம் அமைதி பெற்று, பக்குவம் அடைந்து வலிமை பெறுகின்றது. தீய எண்ணங்கள் தோன்றாமல் தடுக்கிறது. மொத்தத்தில் ருத்ராட்சம் அணிந்து இறைவனை பூஜை செய்தால் மறுபிறப்பு இல்லா நிலையை அடையலாம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த ருத்ராட்சங்களுடன் அதற்கு அதிக மிண்ணோட்டதை தரக்கூடிய செம்பை இணைத்து சாய் மகரிஷி கார்த்திக் அவர்களால் ருத்ராட்ச தேர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேரை வீட்டில் வைத்து வழிபடுவது சிறப்பு, வசதி உள்ளவர்கள் இதை எங்கள் மூலம் செய்து கொள்ளலாம் அல்லது ருத்ராட்ச புகைப்படத்தை வைத்து வழிபடலாம். புகை படம் வேண்டுவோர்கள் எங்களிடம் பொற்றுக்கொள்ளலாம்.

 
Untitled Document


 

  Cell : +91 94860 63744
                  97861 95125
  saimaharishi10@gmail.com
  saimaharishi10@yahoo.com

 
 

Flag Counter