Untitled Document
 
  Quick Links
ஆன்மீகம்
ஜோதிடம்
ஜாதகம்
நட்சத்திரங்கள்
பஞ்ச பூதங்கள்
சித்தர்கள்
சித்தர்களின் ஆட்சி
நவக்கிரக கோவில்கள்
குரு
முத்திரைகள்
கண்திருஷ்டி
 
    சித்தர்களின் ஆட்சி

சித்தர்கள் என்பவர்கள் ஜீவன் அழியாமல் பல ஆயிரம் வருடங்களாக வாழ்ந்து வந்தவர்கள். இன்றும் தங்களுடைய ஜீவசமாதிகளிலிருந்து நமக்கு அருளை வழங்கிக்கொண்டுயிருக்கிறார்கள். அவர்கள் அதிகமாக தங்கி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்தது தமிழ்நாட்டில் மட்டுமே இது சிவ பூமி அதனால் தான் தென்னாட்டுடைய சிவனே போற்றி, என்னாற்றவருக்கும் இறைவா போற்றி என்று சொன்னார்கள். இதை கிராம வழக்கில் சொல்வதானால் சித்தன் போக்கு சிவன் போக்கு. சித்தர் வழிநடந்தால் சிவனை அடையலாம், உணரலாம். இன்று பல பித்தர்களை சித்தர்கள் என்று சொல்லி பலரும் வணங்கி வருகின்றனர்கள், இவர்களில் பலபேர் மனநோயாளிகளே பீடி சித்தர், சாக்கு சித்தர், அடிஉதை சித்தர் என்று பலவேறு மனநோயாளிகல் இருக்கின்றனர். இதற்க்கு நம் சித்தம் தெளிவின்மையே காரணம்.

கலியுகத்தின் கடைசி வருடங்களில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இந்த கலியுகத்தில் எப்பொழுது கர்ம காரகன் என்று ஜோதிடம் குறிப்பிடும் சனி மற்றும் ஐந்து கிரகங்கள் பூமியில் நெருக்கமாக தெரிகிறதோ அப்பொழுது சித்தர்களின் ஆட்சி துவங்கும். இதை நான் எழுதும் இந்த நேரத்தில் ஐந்து கிரகங்களை வெறும் கண்களால் பார்க்களாம் என்று தினமல்ர் பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. இந்த நேரத்தில் (ஜனவரி 1, 2012 முதல்) அனைவரின் மனதையும் வருத்தும் பல சம்பவங்கள் நடைபெறும்.

இதற்க்கு ஒரே சாட்சி ஜீவசமாதிகள் அனைத்தும் வலுப்பெற்று மக்களால் வழிபாடு செய்யப் படுவதுதான் ஏன் என்றால் சித்தர்களால் ம்ட்டுமே ஆன்மீக எண்ணம் கொண்ட நல்லவர்களை காக்க முடியும். சித்தர்கள் பாரதத்தை மையமாகக் கொண்டு இந்த பூமியை ஆட்சி செய்யப்போகிறார்கள்.பழனி மலையில் இருக்கும் நவபாஷாண முருகன் சிலை சிதைந்தது நம் அனைவருக்கும் தெரியும். இந்த சிலையை போகர் நிறுவினார். அவர் இதே போல் ஒன்பது நவபாஷாணசிலைகளை உருவாக்கி பழனிமலையிலும், அதைச் சுற்றியுள்ள சில இடங்களிலும் மறைத்து வைத்திருக்கிறார். அதில் ஒன்று பழனி மலையிலிருந்து சபரி மலைக்குச் செல்லும் ஒரு இடத்தில் இருக்கிறது. கிபி 2006 முதல் கிபி 2020 க்குள் போகர் விரும்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் போகராலையே பழனி மலையில் புதிய நவபாஷாண சிலை நிறுவப்படும். அவ்வாறு நிறுவப்பட்டதும், பாரதம் உலகின் தலைசிறந்த வல்லரசு நாடாக மாறிவிடும்.

ஆதாரம் : பல ஜீவ நாடிகள்

தகவல் : சித்தர்களின் மகிமை, பக்கம்24, எழுதியவர் : மறைந்த பி.எஸ்.பி.ஐயா அவர்கள்

இனி வரக்கூடிய காலமானது பிரம்மாவிடமிருந்து நித்திய சிரஞ்சீவியான ஆஞ்சநேயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர் தான் இப்போதைய கலியுக பிரம்மா. அவருடைய சூட்சும சக்தியோ ஞான சித்தரின் சரீரத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்பொழுதைய அமெரிக்க அதிபர் ஆஞ்சநேயர் படத்தை தன்னுடன் வைத்துள்ளார்.

சித்தர்களின் பூமியான தமிழ்நாடு தான் உலகத்திற்கே வல்லரசு ஆகப்போகிறது. உலகமே அதனுடைய ஆட்சியின் கீழ் வரப்போகிறது. இதனை ஞானத்தினால் மட்டுமே உணர முடியும். விஞ்ஞானத்தினால் ஒருபோதும் உணர முடியாது.

சதுரகிரி, பழனி, திருஅண்ணாமலை, திருப்பதி இந்த கோவில்கள் தான் இந்த உலகிற்கே வழிகாட்டப்போகின்றன.

Untitled Document


 

  Cell : +91 94860 63744
                  97861 95125
  saimaharishi10@gmail.com
  saimaharishi10@yahoo.com

 
 

Flag Counter