Untitled Document
 
  Quick Links
ஆன்மீகம்
ஜோதிடம்
ஜாதகம்
நட்சத்திரங்கள்
பஞ்ச பூதங்கள்
சித்தர்கள்
சித்தர்களின் ஆட்சி
நவக்கிரக கோவில்கள்
குரு
முத்திரைகள்
கண்திருஷ்டி
 
    உயர்ந்த மனிதர்கள்

டாக்டர் . ஏ. பி. ஜெ. அப்துல் கலாம்

தலைநகரங்களை
தங்க நாற்கர சாலைகள்
இணைக்க வேண்டும்.
நதிகள் அனைத்தும்
தேசியமயமாக வேண்டும்.
சூரிய சக்தியால்
மின்பற்றாக்குறை
அகல வேண்டும்.
இயற்கை
வேளாண்மையே
இங்கு வேண்டும்.

மதம் பெரிதல்ல மனிதம் பெரிது என்று உணர்த்திய ஒரே மனிதர். ஜனாதிபதிமாளிகையில் சைவ உணவுமட்டுமே சமைக்கச்சொன்னவர். இந்தியர் அல்லாதவர் பிரதமராக கூடாது என்று சொன்னதர்க்காக மறுமுறை ஜனாதிபதி பதவிக்கு மறுக்கப்பட்டவர். போலி உலக அன்னாவியான அமெரிக்க தொலைதொடர்பு சாதனங்களை ஏமாற்றி பொக்ரான்-II (1998) அணுகுண்டை வெடிக்கச்செய்து தமிழனின் பெருமையை உலகறிய செய்தவர்.

ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் ஆவுல் பகீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) (பிறப்பு - அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியியலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் 11-வது இந்தியக் குடியரசுத் தலைவராவார். இவரது பணிக் காலம் 2002-2007 ஆகும்.இவர் "இந்தியாவின் ஏவுகணை மனிதன்" என்றும் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் எறிகணைகள் வடிவமைப்பு, உருவாக்கம் மற்றும் வான் எரிசுகள் வடிவமைப்பு, உருவாக்கம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பு கருதியே அப்பெயர் பெற்றார்.

வாழ்க்கை வரலாறு

அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தாய் மொழி தமிழ். அவருடைய தந்தை இந்து மதத்தின் தலைவர்களிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அப்துல் கலாம் தன்னுடைய சுயசரிதையில் தன் படிப்புச் செலவுகளுக்காக நாளிதழ்களை விற்றதாக குறிப்பிட்டுள்ளார். கலாம் பிறந்த வீடு தற்போதும் ராமேஸ்வரத்தில் உள்ள மசூதி தெருவில் காணமுடிகின்றது. இவருடைய அண்ணன் கலாம் சங்கு கடை என்ற கடையை ராமேஸ்வரத்தில் நடத்தி வருகின்றார். இந்த ஊருக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த வீட்டுக்கு வந்து பார்த்துச் செல்கின்றனர். கலாம் இயற்கையோடு வாழ்ந்தவர். 1964ஆம் ஆண்டு ஒரு சூறாவளிக் காற்று பாம்பன் பாலத்தையும் அதன் மேலே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஒரு ரயிலையும் கலாமின் சொந்த ஊரான தனுஷ்கோடியையும் இழுத்துச் சென்றது. தண்ணீர் என்பது மிகுந்த அழிக்கும் தன்மை வாய்ந்தது என்று அவர் எண்ணிக் கூட பார்த்ததில்லை என்று அவருடைய சுயசரிதையான அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் பெருமை மிகு மாநாடாக செம்மொழி மாநாடு கோவையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆனால் மாநாட்டு நிகழ்ச்சி நிரலை பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் அதிர்ந்து போகிறார்கள்.

உலகத் தமிழர்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கும் தமிழக அரசு அறிவியல் தமிழனாகவும் தமிழனின் பெருமையை உலகிற்கு உணர்த்திய சிறப்பிற்கு உரியவரும், இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவரான ஏவுகணை மனிதர் ஏ பி ஜே அப்துல்கலாம் அவர்களை ஏன் அழைக்கவில்லை என்ற வினா பூதாகாரமாக எழுப்பப்பட்டு வருகிறது.

விருதுகள்

இந்திய அரசு இவருக்கு வழங்கி உயரிய விருதுகள் : பத்மபூஷன் (1981), பத்மவிபூஷன் (1990), பாரத் ரத்னா (1997).

எழுதியுள்ள நூல்கள்

அக்னிச் சிறகுகள்
எழுச்சித் தீபங்கள்
இந்தியா 2020
இந்தியா 2010


சகாயம் IAS

கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே என்று தன் கடமையை முழுமனதுடன் சரியாக செய்யும் பயம் இல்லாத ஜெயம் கொண்டான். இவர் விவேகானந்தர் சொன்ன நல்ல இளைஞர்கள் 100 பேர் இருந்தால் நாட்டையே மாற்றலாம் என்ற 100 ரில் ஒருவர் தான் இவர்.

பிறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் அருகில் உள்ள பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தைச் சார்ந்த உபகாரம் பிள்ளை - சவேரி அம்மாள் தம்பதியினரின் ஐந்து மகன்களில் கடைசியாக பிறந்தவர் தான் நமது சகாயம் ஐய்யா அவர்கள்.

படிப்பு

பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் புகழ்பெற்ற லயோலா கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்பு (சமூகத் தொண்டு), சட்டப்படிப்பு என, அடுத்தடுத்து தன் கல்வித் தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார்.

மத்திய அரசாங்க பணி கிடைத்த போது வேண்டாம் என்று உதரிவிட்டு தமிழ்நாட்டில் தான் வேலை செய்வேன் என்று குருப் 1 தேர்வில் வெற்றி பெற்று தமிழக அரசு பணிக்கு வந்தவர்.

பதவிகள்

தர்மபுரியில் பயிற்சி ஆட்சியர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், கோட்ட வளர்ச்சி அதிகாரி, திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் கோட்ட வளர்ச்சி அதிகாரி, திருச்சி உணவு பொருள் வழங்கல் துறையின் முதுநிலை மண்டல மேலாளர், கோவை ஆயப்பிரிவு துணை ஆணையாளர், சென்னை, மாவட்ட வருவாய் அதிகாரி, தொழில் வணிகத்துறை இணை இயக்குனர், மாநிலத் தேர்தல் ஆணையச் செயலர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர், புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் ஆகிய பணிகளை வகித்துள்ள இவர் தற்போது மதுரை மாவட்ட ஆட்சியராக உள்ளார்.

குறிப்பிடத்தக்க செயல்கள்

கூடலூர், கோட்ட வளர்ச்சி அதிகாரியாக இருந்த போது அவரது அறையில் “If you have power, use it for the poor” - உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து. என்கிற வாசகங்களை எழுதி வைத்திருந்தார்.

நாமக்கல், மாவட்ட ஆட்சியராக இருந்த போது, இவரது சொத்துக்கள் விவரத்தை அரசின் இணையதளம் மூலம் வெளியிட்டு பரபரப்பேற்படுத்தினார்.(மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் இந்திய ஆயுள் காப்பீடுக் கழக வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனத்தின் கடனுதவித் திட்டம் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு , வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி என்பது இங்கு குறிப்பிடக்கூடியது.)

மதுரை மாவட்ட ஆட்சியராக மதுரை மாவட்டத்தில் 2011 சட்டமன்ற தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வழி செய்தார். இவரது அறையில் “லஞ்சம் தவிர்த்து. நெஞ்சம் நிமிர்த்து” என்கிற வாசகம் காணப்படுகிறது.

நீதிக்கு பெயர் பெற்ற மதுரை மண்ணில் பல ஏழைகளுக்கு சரியான நீதி கிடைப்பது இவரால் தான்.

நாமக்கல்லில் ஆட்சியராக இருந்த போதும், பிறகு தற்போது மதுரையிலும் ‘தொடுவானம்’ என்ற இணைய வலைப்பூ வாயிலாக பொது மக்கள் தங்களுக்கான புகாரை நேரடியாக ஆட்சியருக்கு அனுப்பும் வழிவகை செய்திருக்கிறார். கிராமங்களில் தன்னார்வலர்களுக்குப் பயிற்சி அளித்து இந்தத் திட்டத்தை திறம்பட செயல்படுத்தி வருகிறார்.

 
Untitled Document


 

  Cell : +91 94860 63744
                  97861 95125
  saimaharishi10@gmail.com
  saimaharishi10@yahoo.com

 
 

Flag Counter